Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வாள் சண்டை போட்டியில் ஜான்போஸ்கோ பள்ளி வெற்றி

வாள் சண்டை போட்டியில் ஜான்போஸ்கோ பள்ளி வெற்றி

வாள் சண்டை போட்டியில் ஜான்போஸ்கோ பள்ளி வெற்றி

வாள் சண்டை போட்டியில் ஜான்போஸ்கோ பள்ளி வெற்றி

ADDED : செப் 27, 2011 11:31 PM


Google News
ஓசூர் : ஓசூர் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகளில் ஜான் போஸ்கோ பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனைப்படைத்துள்ளது. தேசிய மற்றும் மாநில வாள் சண்டை போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்றனர். ஓசூர் கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் பல்வேறு மையங்களில் நடந்தது. இப்போட்டிகளில் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன.

இவற்றில் சூப்பர் சீனியர் கோ-கோ, கைப்பந்து, கடற்கரை கையுந்துபந்து மற்றும் பூப்பந்து, சீனியர் பிரிவில் கோ-கோ, கைப்பந்து, கடற்கரை கையுந்துபந்து மற்றும் எறிபந்து ஆகிய குழு போட்டிகளில் ஜான்போஸ்கோ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனைப்படைத்துள்ளனர். கொல்கத்தாவில் தேசிய அளவில் நடந்த வாள் சண்டை போட்டியில் ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் பதக்கங்களை பெற்றனர். சிவகங்கையில் நடந்த மாநில வாள்சண்டை போட்டியில் ஒரு தங்கம், ஆறு வெள்ளி, 11 வெண்கலம் பதக்கங்களை பெற்றனர். வாள் சண்டை போட்டியில் ஆறு மாணவிகள், கைப்பந்து போட்டியில் ஒரு மாணவி, கோ-கோ போட்டியில் இரண்டு மாணவிகள், எறிபந்து போட்டியில் இரு மாணவிகள் தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் பிரகாசமேரி, தலைமை ஆசிரியை சலேத்மேரி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தூர்துமேரி, பயிற்றுனர்கள் சுரேஷ், கருப்பையா மற்றும் பி.டி.ஏ., நிர்வாகிகள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us