ADDED : செப் 27, 2011 11:31 PM
தேன்கனிக்கோட்டை: தேன்னிக்கோட்டை அருகே கொலை முயற்சி வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த சாலிவாரம் கிராமத்தில் சுகுணா கோழிபண்ணை உள்ளது.
இங்கு நொகனூரை சேர்ந்த முனிராஜ் (30) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
காடுமுச்சந்திரத்தை சேர்ந்த மல்லேஷ் (30) வாட்ச்மேனாக பணிபுரிகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம்
மல்லேஷ் தனது நண்பர்கள் பாவள்ளியை முருகன் (23) குலுக்கனவலசையை சேர்ந்த
திருப்பத்தூர் பிரகாஷ் (23) ஆகியோருடன் வேலை முடிந்து வீட்டுக்கு
திரும்பிய போது, முனிராஜை பஜப்பள்ளிக்கு கடத்தி சென்றனர். அங்கு மூவரும்
அரிவாளால் முனிராஜை சரமாரியாக வெட்டனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
முனிராஜ் இறந்து விட்டதாக நினைத்து மூவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். தேன்கனிக்கோட்டை போலீஸார் விசாரித்து,
முனிராஜை கொலை செய்ய முயன்ற மல்லேஷ், முருகன், பிரகாஷ் ஆகியோரை கைது
செய்தனர்.


