Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் கோலாகல துவக்க விழா

செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் கோலாகல துவக்க விழா

செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் கோலாகல துவக்க விழா

செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் கோலாகல துவக்க விழா

ADDED : செப் 28, 2011 12:42 AM


Google News

திருச்செந்தூர் : திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் தினசரி ரயிலாக இயக்கப்பட்டது.

திருச்செந்தூர் திருநெல்வேலி அகல ரயில்பாதை நிறைவடைந்தபின் கடந்த 2008 செப்., 27ம் தேதிமுதல் திருச்செந்தூர் திருநெல்வேலிக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. அதுமுதல் தினசரி சென்னை செல்ல ரயில் வேண்டுமென பயணிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை 2009 பிப் 8ம் தேதி திருச்செந்தூர் சென்னைக்கு வாராந்திர ரயிலாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் தினசரி ரயிலாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டுமென்று பொதுமக்கள் அரசியல் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கடந்த பிப் மாதம் ரயில்வே பட்ஜெட்டில் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க அறிவிக்கப்பட்டது.



இதனடிப்படையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் தினசரி ரயிலாக இயக்கப்பட்டது. நேற்று இரவு 7.45 மணிக்கு ஸ்டேசன் மாஸ்டர் பச்சை விளக்கை காட்ட திருச்செந்தூர் சென்னைக்கு இடையேயான முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது. இந்த ரயில் முற்பகல் 11.40 மணிக்கு சென்னை எக்மோர் சென்றடையும். இதேபோல் நேற்றுமாலை 4.05 மணிக்கு சென்னை எக்மோரில் புறப்பட்டது. இந்த ரயில் இன்று காலை 8.10 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும் சென்னைக்கு தினசரி செல்வதால் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். செந்தூர் எக்ஸ்பிஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி கோச் ஒன்று, இரண்டாம் வகுப்பு ஏசி கோச் ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி கோச் ஒன்று, படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு கோச் 7, முன்பதிவில்லாத பொதுப்பெட்டி 6, கார்டு கோச் 2, உட்பட மொத்தம் 18 கோச்சுகள் உள்ளது. தினசரி ரயில் துவக்க விழா தேர்தல் விதிமுறையின் காரணமாக விழா ஏதும் இல்லாமல் எளிமையாக துவங்கியது. ரயில் துவக்க விழா நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், ஸ்டேசன் மாஸ்டர் ஜெயக்குமார்,தென்னக ரயில்வே மதுரை கோட்ட உதவி பொறியாளர் திருமாவளவன்,லோககோ இனஸ்பெக்டர் முருகன், ஆர்.பி.எப்.உதவி ஆய்வாளர் ஆறுமுகம்,ஹெட் கான்ஸ்டபில் சம்பத்,திருச்செந்தூர் நகர காங் தலைவர் சுரேஷ், மாவட்ட காங் செயலாளர் ஹரிஹரன், சேவாதள காங் மாவட்ட செயலாளர் ஜெயந்திநாதன், நகர செயலாளர் கார்க்கி, யாதவ வியாபாரிகள் சங்க சுடலை, கண்ணன், முருகேசன், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலசங்கசெயலாளர் பிரம்ம நாயகம், கௌரவதலைவர் கண்ணன், நிர்வாக குழு உறுப்பினர் பழனி, இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல், திருச்செந்தூர் பயணிகள்நலசங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஆட்டோசங்க தலைவர் காளிமுத்து, லோகநாதன், ஜான்சன், ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் செல்லத்துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



முதல் ரயிலில் செல்லும் ரயில்வே ஊழியர்கள் இன்ஜின் டிரைவர் செல்வராமகிருஷ்ணன், டிடிஆர்கள் தமிழரசன்,பழனி, கார்த்திகேயன், கார்டு : ஜேடிகேசிங்,மற்றும் உதவி இஞ்சின் டிரைவர் தேவதாஸ் செந்தூர் ரயில் நின்று செல்லும் இடங்கள் திருச்செந்தூர், காயல்பட்டணம், ஆறுமுகநேரி, குரும்பூர்,நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம்,மயிலாடுதுறை, சிர்காழி, சிதம்பரம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எக்மோர்.



பயணச்சீட்டு விபரம் : திருச்செந்தூர் முதல் சென்னைக்கு முன்பதிவு கட்டணத்துடன் முதல் வகுப்பு ஏசி ரூ.1812, இரண்டாம் வகுப்பு ஏசி ரூ.1082, மூன்றாம் வகுப்பு ஏசி ரூ.787, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரூ.290, முன்பதிவில்லா கட்டணம் ரூ.149, இந்த ரயில் பயணம் செய்த முதல் பயணியான பரமன்குறிச்சியை சேர்ந்த செல்வகுமார் கூறியதாவது; நான் சென்னையில் வியாபாரம் செய்து வருகிறேன். வாரம் ஒருநாள் இயக்கப்பட்டு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக மாற்றியிருப்பது மகிழ்சசிக்குறிய செய்தி எங்களைப்போன்ற வியாபாரிகள் குறைந்த செலவில் சென்னை செல்ல முடியும். இந்த ரயில் சென்னை சென்றடையும் நேரம் குறைக்கப்பட்டால் மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறினார். ரயில் ஓட்டுநர் செல்வராமகிருஷ்ணன், உதவி ஓட்டுநர் பால்தேவதாஸ், ரயில்வே நிலைய அதிகாரி ஜெயக்குமார், ஆகியோருக்கு நகர காங் சார்பிலும், நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பிலும் சுரேஷ் சால்வை அணிவித்தார். கடந்த 2008 செப்டம்பர் 27 முதல் பாசஞ்சர் ரயில் திருச்செந்தூர் திருநெல்வேலிக்கு இடையே துவங்கியது மூன்று வருடங்களுக்குப்பின் 2011 செப்டம்பர் 27 முதல் தினசரி சென்னை ரயில் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us