ADDED : செப் 28, 2011 11:38 PM
மதுரை: விருதுநகர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன்.
திருட்டு உட்பட ஐந்து வழக்குகளில் மதுரை சிறையில் ரிமாண்ட் 'செல்' மூன்றில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 7 மணிக்கு மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்கள் வருவதற்குள் 'சிம்' கார்டை மகேந்திரன் பதுக்கினார். அவரிடமிருந்து மொபைல் போன் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பின், காலை 10 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தி, ஒருவழியாக 'சிம்' கார்டை பெற்றனர்.


