/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூர் நகராட்சி கவுன்சிலர் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்புஓசூர் நகராட்சி கவுன்சிலர் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
ஓசூர் நகராட்சி கவுன்சிலர் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
ஓசூர் நகராட்சி கவுன்சிலர் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
ஓசூர் நகராட்சி கவுன்சிலர் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : செப் 28, 2011 11:39 PM
ஓசூர்: ஓசூர் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் 45 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய சிட்டிங் கவுன்சிலர் பலர் போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டனர். ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க., சார்பில் சிட்டிங் நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். 45வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். ஒன்றாவது வார்டு ராஜசேகர், இரண்டாவது வார்டு அப்துல்ரகுமான் பாரி, மூன்றாவது வார்டு முனிகிருஷ்ணன், நான்காவது வார்டு கோவிந்தப்பா, ஐந்தாவது வார்டு சண்முகம், ஆறாவது வார்டு ராஜம்மா, ஏழாவது வார்டு அமுதாஸ்ரீதர், எட்டாவது வார்டு புஷ்பா, ஒன்பதாவது வார்டு ஆனந்தய்யா, 10வது வார்டு அயூப்கான், 11வது வார்டு பாலமுருகன் போட்டியிடுகின்றனர். 12வது வார்டு வெங்கடேஷ், 13வது வார்டு பாபு, 14வது வார்டு நாராயணசாமி, 15வது வார்டு நடராஜ், 16வது வார்டு கிருஷ்ணப்பா, 17வது வார்டு நீலம்மா, 18வது வார்டு சுரேஷ், 19வது வார்டு கிருஷ்ணன், 20வது வார்டு சாவித்திரி, 21வது வார்டு பாரதிகுமார், 22வது வார்டு சுமலதா, 23வது வார்டு சீனிவாசன், 24வது வார்டு பவானி, 25வது வார்டு முனிகிருஷ்ணன், 26வது வார்டு ராஜேந்திரன், 27வது வார்டு சிவக்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28வது வார்டு சவுந்தர்யா, 29வது வார்டு இந்திராணி, 30வது வார்டு அனுசுயா, 31வது வார்டு ஜெய் ஆனந்த், 32வது வார்டு வரலட்சுமி, 33வது வார்டு எல்லோராமணி, 34வது ரேவதி, 35வது வார்டு நாராயணப்பா, 36வது வார்டு ராஜராஜன், 37வது வார்டு சுகுமாரன், 38வது வார்டு தட்சீணாமூர்த்தி, 39வது வார்டு தனலெட்சுமி, 40வது வார்டு முனிரத்தினா, 41வது வது வார்டு சென்னீரப்பா, 42வது வார்டு சரவணன், 43வது வார்டு ரவிக்குமார், 44வது வார்டு பி.ரேவதி, 45வது வார்டு ரமேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் சிட்டிங் தி.மு.க., கவுன்சிலர்கள் நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அக்ரோ நாகராஜ், சீனிவாசன், குமார், முன்னாள் கவுன்சிலர் ஆர்.எஸ்.மணி, ஆகியோர் இந்த முறை போட்டியிடவில்லை. இவர்கள் தங்களுடைய வார்டுகளில் தங்கள் ஆதரவாளர்கள் போட்டியிட சீட் வாங்கி கொடுத்துள்ளனர். கட்சி சீனியர்கள் பலருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சீட் கிடைக்காத பலர், அந்தந்த வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். புதியவர்கள் பலருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்தமுறை தோல்வியடைந்த மாவட்ட துணை செயலாளர் தன லட்சுமி, அமுதா ஸ்ரீதர், முனிரத்தினா உள்ளிட்ட பெண் நிர்வாகிகளுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.


