/உள்ளூர் செய்திகள்/கரூர்/பொதுக்கூட்டம் நடத்த 8 இடம் போலீஸார் அறிவிப்புபொதுக்கூட்டம் நடத்த 8 இடம் போலீஸார் அறிவிப்பு
பொதுக்கூட்டம் நடத்த 8 இடம் போலீஸார் அறிவிப்பு
பொதுக்கூட்டம் நடத்த 8 இடம் போலீஸார் அறிவிப்பு
பொதுக்கூட்டம் நடத்த 8 இடம் போலீஸார் அறிவிப்பு
ADDED : செப் 28, 2011 11:47 PM
கரூர்: கரூரில் உள்ளாட்சி தேர்தலின் போது அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள எட்டு இடங்கள் குறித்த அறிவிப்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கரூர் நகராட்சிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (29 ம் தேதி) கடைசி நாளாகும். நாளை முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்துக்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு, கரூர் பெரு நகராட்சிக்கு முதன் முதலாக தேர்தல் நடக்கிறது. முதன் முறையாக கரூர் நகராட்சியை கைப்பற்ற அ.தி.மு. க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்ய தயார் நிலையில் உள்ளனர். கரூர் பெரு நகராட்சியை தக்க வைத்து கொள்ள தி.மு.க., வும் பலத்தில் குதித்துள்ளது. இதனால் கரூரில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தில் அனல் பறக்கும். இதையடுத்து கரூர் போலீஸ் ஸ்டேஷன் சரகத்துக்குட்ப்பட்ட பகுதிகளில் எட்டு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். அதில் வேலுசாமிபுரம் பஸ் ஸ்டாண்ட், சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகில், லைட் ஹவுஸ் குமரன் உயர்நிலைபள்ளி அருகில், செங்குத்தபுரம் மெயின் ரோடு, சின்ன ஆண்டாங்கோவில் தெரு, செங்குத்தபுரம் 80 அடி ரோடு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை அருகில் மற்றும் சேர்மன் ராமானுஜம் தெரு ஆகிய பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'பொதுக்ககூட்டம் நடத்த அனுமதி கேட்டு முதலில் வரும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்' என போலீஸார் தெரிவித்தனர்.


