/உள்ளூர் செய்திகள்/தேனி/தினமலர் இதழ் செய்தி கூட்டுறவுத்துறை உத்தரவுதினமலர் இதழ் செய்தி கூட்டுறவுத்துறை உத்தரவு
தினமலர் இதழ் செய்தி கூட்டுறவுத்துறை உத்தரவு
தினமலர் இதழ் செய்தி கூட்டுறவுத்துறை உத்தரவு
தினமலர் இதழ் செய்தி கூட்டுறவுத்துறை உத்தரவு
ADDED : செப் 29, 2011 12:38 AM
தேனி : தினமலர் இதழ் செய்தியை வழிகாட்டியாக கொண்டு செயல்பட வேண்டும் என, செய்தி நகலுடன் கூடிய சுற்றறிக்கையை தமிழக கூட்டுறவுத்துறை அனுப்பி உள்ளது.பொது வினியோகத்திட்டத்தின் செயல்பாடுகள், குறைகள், நிறைகள் குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, எப்போதும், எல்லா பொருட்களும் வழங்க வேண்டும். இலவச அரிசி வாங்கும் போது மற்ற பொருட்களை விலை கொடுத்து வாங்குவதற்கு நிர்பந்தம் செய்யக்கூடாது போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.இச்செய்தியை அனைத்து மாவட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர்கள், துணை பதிவாளர்கள், அனைத்து உணவு கட்டுப்பாடு அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார். இதே போல் சிவில் சப்ளை கமிஷனரும், மாவட்ட உணவு மற்றும் வழங்கல் துறைக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


