போலீஸ் கட்டுப்பாட்டு அறை இடமாற்றம்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை இடமாற்றம்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை இடமாற்றம்
ADDED : செப் 30, 2011 01:49 AM
ஈரோடு: ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறை, நேற்று இடமாற்றம்
செய்யப்பட்டது.சட்டம் ஒழுங்கு மற்றும் போலீஸாரின் நடவடிக்கைகளை தொலைத்
தொடர்பு சாதனம் மூலம் கண்காணிக்கும் பொறுப்பு, கட்டுப்பாட்டு அறை
போலீஸாருக்கு உள்ளது.
ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை, ஈரோடு
எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கி வருகிறது. 16 எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம் 24
போலீஸார் இங்கு பணியாற்றுகின்றனர்.டி.சி.பி., டி.எஸ்.பி., அலுவலகம் ஈரோடு
அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இயங்கியது. இந்தப்பிரிவு
சமீபத்தில் பழைய ஆயுதப்படை வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. காலியாக
இருந்த இந்த அலுவலகம், நேற்று முதல் கட்டுப்பாட்டு பிரிவாக இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளது.இடமாற்றம் காரணமாக பழைய கன்ட்ரோல் ரூம் அறை,
பத்திரிகையாளர் அறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த பத்திரிகையாளர்கள்
அறை, மோப்பநாய் பிரிவு அலுவலகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது.அதேபோல்,
போலீஸ் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில்
உள்ள மரங்களுக்கு, பெயின்ட் அடிக்கும் பணி நடக்கிறது. போலீஸ் துறைக்கு
உண்டான மஞ்சள், சிவப்பு நிறத்தில் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள 12
மரங்களுக்கு பெயின்ட் அடிக்கும் பணி நேற்று துவங்கியது.