Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறந்த கொலுக்களுக்கு பரிசு: பிக் எப்.எம்., வழங்கியது

சிறந்த கொலுக்களுக்கு பரிசு: பிக் எப்.எம்., வழங்கியது

சிறந்த கொலுக்களுக்கு பரிசு: பிக் எப்.எம்., வழங்கியது

சிறந்த கொலுக்களுக்கு பரிசு: பிக் எப்.எம்., வழங்கியது

ADDED : செப் 30, 2011 01:51 AM


Google News
புதுச்சேரி : சிறந்த நவராத்திரி கொலுக்களுக்கு பிக் எப்.எம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி 92.7 பிக்.எப்.எம்.,மில் 'நலம் தரும் நவராத்திரி' என்னும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் எஸ்.எம். எஸ்., மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற வளவனூர் வடக்கு தெற்கு அக்ரகாரத்திற்கு பி.எப்.எம்., குழுவினர் வீடு வீடாக ö ச ன்று நேற்று முன்தினம் கொலுவை பார்வையிட்டனர். சிறந்த கொலுக்களை நிகழ்ச்சி தொகுப்பாளினி லீனா, பொறுப்பாளர் பவித்ரா தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினர். வளவனூர் சிவசங்கரி வசந்தி, ரேவதி, அம்பிகா, அலமேலு, ராதா, நித்யா தனலட்சுமி, சபிதாவிற்கு நவராத்திரி கொலுவிற்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிக் எப்.எம் உதவியாளர்ககள் மணி, செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிக் எப்.எம்மில் தொடர்ந்து 9 நாட்களுக்கு ஒலிபரப்பாக உள்ள 'நலம் தரும் நவராத்திரியில் பங்கு கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது மொபைல் போனில் ஆஐஎ என்று டைப் செய்து, பிறகு ஒரு இடைவெளி விட்டு நவராத்தி என டைப்பிங் செய்து தங்களது பெயர், ஊருடன் 55454 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுளை ஜெகதீஸ் செய்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us