Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஏஜன்டுகள் நியமிக்க10ம் தேதி நேர்காணல்

ஏஜன்டுகள் நியமிக்க10ம் தேதி நேர்காணல்

ஏஜன்டுகள் நியமிக்க10ம் தேதி நேர்காணல்

ஏஜன்டுகள் நியமிக்க10ம் தேதி நேர்காணல்

ADDED : செப் 30, 2011 01:51 AM


Google News
சேலம்: சேலம் கிழக்கு கோட்டத்தில், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களின் கீழ், நேரடி ஏஜன்டுகள் நியமிப்பதற்கான நேர்காணல், அக்டோபர் 10ம் தேதி காலை 10 மணிக்கு, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.அக்டோபர் 5ம் தேதி, 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேறு துறைகளில் காப்பீட்டு முகவர்களாக பணிபுரிபவர்கள் தவிர, தகுதியுடைய விருப்பமுள்ள மற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். கல்வித்தகுதி, வயது குறித்த ஒரிஜினல் சான்றிதழ், ஜெராக்ஸ் நகல்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம் என, கிழக்கு கோட்ட அஞ்சல கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us