/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெள்ளாங்கோவிலில் அ.தி.மு.க., கோஷ்டி பூசல்வெள்ளாங்கோவிலில் அ.தி.மு.க., கோஷ்டி பூசல்
வெள்ளாங்கோவிலில் அ.தி.மு.க., கோஷ்டி பூசல்
வெள்ளாங்கோவிலில் அ.தி.மு.க., கோஷ்டி பூசல்
வெள்ளாங்கோவிலில் அ.தி.மு.க., கோஷ்டி பூசல்
ADDED : செப் 30, 2011 01:54 AM
கோபிசெட்டிபாளையம்: வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,
வேட்பாளர் தன்னாசியும், அ.தி.மு.க.,வை சேர்ந்த யூனியன் கவுன்சிலர்
மதிவாணனும், மனுத்தாக்கல் செய்துள்ளதால், கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு
வந்துள்ளது.உள்ளாட்சி தேர்தலில் வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து தலைவர்
பதவிக்கு, சிட்டிங் பஞ்சாயத்து தலைவரான தன்னாசியை, அ.தி.மு.க., வேட்பாளராக
அறிவித்தது. வெள்ளாங்கோவில் அ.தி.மு.க.,வை சேர்ந்த மதிவாணன், மூன்றாவது
முறையாக யூனியன் கவுன்சிலராக உள்ளார். இருவரும் அமைச்சர் செங்கோட்டையனில்
விசுவாசிகள்.உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என கட்சி
தொண்டர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் செப்., 4 தேதி வெள்ளாங்கோவிலில்
நடந்தது. கட்சியில் துடிப்புடன் செயல்படும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரலாம்
வேண்டும் என யூனியன் கவுன்சிலர் மதிவாணன் வலியுறுத்தினார்.தன்னாசிதான்
மீண்டும் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால்
மதிவாணன் ஆதரவாளர்களுக்கும், தன்னாசி ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல்
ஏற்பட்டது.வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான அ.தி.மு.க.,
வேட்பாளராக தன்னாசி அறிவிக்கப்பட்டார். மதிவாணன் ஆதரவாளர்கள்
அதிர்ச்சியடைந்தனர். உள்ளாட்சி தேர்தலில் தன்னாசியை எதிர்த்து மதிவாணன்
போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க.,
நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியும், பயனில்லை.வெள்ளாங்கோவில்
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தன்னாசியும், அவருக்கு போட்டியாக மதிவாணனும்
மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வெள்ளாங்கோவில் அ.தி.மு.க.,வில் இரட்டையர்களாக
வலம் வந்த தன்னாசிக்கும், மதிவாணனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதிவாணன் கூறுகையில், ''வெள்ளாங்கோவிலை
சுற்றியுள்ள 18 கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானத்தின் அடிப்படையில்தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.
தன்னாசியை மாற்றவில்லை என்றால், நான் போட்டியிடுவது உறுதி.
இக்குழப்பத்துக்கு எல்லாம் குள்ளம்பாளையம் பாலுதான் காரணம். அரசியலுக்கு
அப்பாற்பட்ட அவர், அதிகாரிகளை மிரட்டி வருகிறார். இதனால், அமைச்சருக்கு
கெட்ட பெயர் ஏற்படும்,'' என்றார்.தன்னாசி கூறுகையில், ''செங்கோட்டையனின்
தீவிர ஆதரவாளர் நான். தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் கபடி போட்டி
நடத்தினேன்; இந்த வளர்ச்சி அவருக்கு பிடிக்கவில்லை. கட்சி பாகுபாடின்றி
பாடுபடுவேன். மதிவாணனுக்கும், அவரது அண்ணனுக்கும் இடையே பிரச்னை உள்ளது.
அவர்களது பிரச்னையால் என்னை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்,'' என்றார்.