/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திராவிட கட்சிகளின் வேட்பாளர்களை "அவுட்' ஆக்கி வெற்றி பெறுவேன் : காங்.,வேட்பாளர் நம்பிக்கைதிராவிட கட்சிகளின் வேட்பாளர்களை "அவுட்' ஆக்கி வெற்றி பெறுவேன் : காங்.,வேட்பாளர் நம்பிக்கை
திராவிட கட்சிகளின் வேட்பாளர்களை "அவுட்' ஆக்கி வெற்றி பெறுவேன் : காங்.,வேட்பாளர் நம்பிக்கை
திராவிட கட்சிகளின் வேட்பாளர்களை "அவுட்' ஆக்கி வெற்றி பெறுவேன் : காங்.,வேட்பாளர் நம்பிக்கை
திராவிட கட்சிகளின் வேட்பாளர்களை "அவுட்' ஆக்கி வெற்றி பெறுவேன் : காங்.,வேட்பாளர் நம்பிக்கை
தென்காசி : 'தென்காசி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் திராவிட கட்சிகளின் வேட்பாளர்களை 'அவுட்' ஆக்கி நான் வெற்றி பெறுவேன்' என காங்.,வேட்பாளர் சிவகாமி கூறினார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு சிவகாமி கூறியதாவது: ''தென்காசி நகராட்சி தலைவர் பதவிக்கு காங்.,வேட்பாளராக போட்டியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மக்களிடம் தேசிய பற்று மேலோங்க வேண்டும். இதற்கு காங்.,பெரும் அளவில் பாடுபட்டு வருகிறது. தென்காசி நகர மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் தகுதி திராவிட கட்சிகளை காட்டிலும் காங்கிரசுக்கு தான் அதிகம் இருக்கிறது. என்னை நகராட்சி தலைவராக வெற்றி பெற செய்தால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன். நகராட்சியின் முதல் கூட்டத்திலேயே தென்காசியை மாவட்ட தலைநகராக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்து அக்கோரிக்கை நிறைவேற பாடுபடுவேன். இக்கோரிக்கையை முன் வைத்துதான் திராவிட கட்சிகள் பலமுறை தேர்தலை சந்தித்துள்ளன. ஆனால் வெற்றி பெற்றதும் அக்கோரிக்கையை அவர்கள் கிடப்பில் போட்டு விட்டனர்.
தென்காசியின் ஜீவ நதியாக சிற்றாறு விளங்குகிறது. இதில் கலக்கும் சாக்கடை கழிவுகளை பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் அகற்ற நடவடிக்கை எடுப்பேன். ஆறு மற்றும் நீர்நிலைகள் மாசுபடாமல் இருக்கவும், நகர் தூய்மையாக இருக்கவும் முன்னுரிமை வழங்குவேன். தென்காசி நகராட்சி எல்கைக்குள் ஹைடெக் தொழில் நுட்ப பூங்காவை தமிழக அரசு, தென்காசி எம்.எல்.ஏ.,மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் ஒத்துழைப்போடு உருவாக்கி தருவேன். பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு நர்சிங் கல்லூரி அமைக்க பாடுபடுவேன். நகரின் குடிநீர் தேவையை போக்க முழுமையாக பூர்த்தி செய்ய தேவையான இடங்களில் கூடுதல் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரிங் ரோடு அமைக்கப்படும். நகரில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.
தென்காசி சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து சமய புனித ஸ்தலங்களுக்கும் வந்து செல்லும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பயன்பெறும் வகையில் நகராட்சி சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைத்து தருவேன். சீவலப்பேரிகுளத்தின் கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கவும், அக்குளத்தில் படகு குழாம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். ஆசாத்நகர் பகுதியில் பகுதி ரேஷன் கடை அமைப்பேன். நவீன மின்சார எரிமேடை தேவையான இடங்களில் அரசு சார்பில் அமைக்க பாடுபடுவேன்.
தென்காசி பகுதியை கல்வியிலும், தொழில் துறையிலும் வளர்ச்சியடைய செய்து முன்மாதிரி நகராக மாற்றுவேன். அதிநவீன விளையாட்டு கூடம் அமைக்கப்படும். தடையில்லா மின்சார வினியோகத்திற்கு வழிவகை செய்யப்படும். நகராட்சி பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் நலன் காக்க பாடுபடுவேன். வாடகை, ஒப்பந்த அடிப்படையிலான வாகனங்கள் நிரந்தரமாக நிறுத்தவும், டிரைவர்கள் ஓய்வு எடுக்க ஓய்வறையும் அமைக்கப்படும். மேலும் தென்காசி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் முன் வைக்கும் மக்கள் நல கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற முழு அளவில் பாடுபடுவேன். திராவிட கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தலில் 'அவுட்' ஆக்கி நான் வெற்றி பெறுவேன். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு வாக்காளர்கள் என்னை ஆதரிக்க வேண்டும்'' என்றார் காங்.,வேட்பாளர் சிவகாமி.