/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 01, 2011 11:46 PM
கடலூர் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிபந்தனையின்றி காலமுறை ஊதிய ஏற்ற முறையான நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகள், முரண்பாடுகளை களையும் வகையில் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொருளாளர் பச்சையப்பன், பொருளாளர் குமார் வாழ்த்திப் பேசினர். செயலர் பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இணைச் செயலர் ரங்கசாமி நன்றி கூறினார். திட்டக்குடி: தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டத் தலைவர் திருநாவுக்கரசு, செயலர் அன்பழகன், மாவட்டத் தலைவர் காசிநாதன், துணைத் தலைவர் அய்யாசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம்: தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாட்டு துரை தலைமை தாங்கினார். கொளஞ்சியப்பன், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். முருகவேல், முரளி, தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


