/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் மாவட்டத்தில் 13,343 மனு ஏற்பு957 மனு தள்ளுபடி: வாபஸ் பெற நாளை கடைசிநாமக்கல் மாவட்டத்தில் 13,343 மனு ஏற்பு957 மனு தள்ளுபடி: வாபஸ் பெற நாளை கடைசி
நாமக்கல் மாவட்டத்தில் 13,343 மனு ஏற்பு957 மனு தள்ளுபடி: வாபஸ் பெற நாளை கடைசி
நாமக்கல் மாவட்டத்தில் 13,343 மனு ஏற்பு957 மனு தள்ளுபடி: வாபஸ் பெற நாளை கடைசி
நாமக்கல் மாவட்டத்தில் 13,343 மனு ஏற்பு957 மனு தள்ளுபடி: வாபஸ் பெற நாளை கடைசி
ADDED : அக் 02, 2011 12:34 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 3, 577 உள்ளாட்சிப் பதவிகளுக்கு
பெறப்பட்ட, 14 ஆயிரத்து 300 வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்து, 957
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவற்றில், 13 ஆயிரத்து 343 மனுக்கள்
ஏற்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டதில், ஐந்து நகராட்சி, 19 டவுன்
பஞ்சாயத்து, 15 யூனியன், 322 பஞ்சாயத்து, 153 நகராட்சிக் கவுன்சிலர், 294
டவுன் பஞ்சாயத்துக் கவுன்சிலர், 17 மாவட்ட கவுன்சிலர், 2,595 வார்டு
உறுப்பினர் என மொத்தம் 3,577 உள்ளாட்சிப் பதவியிடங்கள் உள்ளன.அவற்றுக்கான
வேட்புமனு தாக்கல், கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம், 14
ஆயிரத்து 300 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீது,
அந்தந்த நகராட்சி, யூனியன், பஞ்சாயத்து அலுவலங்களில் பரிசீலனை
செய்யப்பட்டது.அதில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு தாக்கல்
செய்திருந்த, 149 வேட்புமனுக்களில், 20 மனுக்கள் தள்ளுபடி செய்து, 129
மனுக்கள் ஏற்கப்பட்டன. அதுபோல், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 81
வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்து, 1,095 மனுக்கள் ஏற்பட்டன. பஞ்சாயத்து
தலைவர் பதவிக்கு, 68 மனுக்கள் தள்ளுபடி செய்து, 1,811 மனுக்கள்
ஏற்கப்பட்டன.
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு, 721 மனுக்கள் தள்ளுபடி
செய்து, 7,595 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஐந்து நகராட்சிகளில், சேர்மன்
வேட்பாளருக்கான மனுக்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படாமல், 71 மனுக்கள்
ஏற்கப்பட்டன. நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 1,074 மனுக்கள் ஏற்கப்பட்டு,
ஆறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு,
179 மனுக்கள் ஏற்கப்பட்டு, ஒன்பது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.டவுன்
பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவியிடத்துக்கு, 1,389 மனுக்கள்
ஏற்கப்பட்டு, 52 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. அதன்படி, செப்டம்பர் 29ம்
தேதி வரை பெறப்பட்ட, 14 ஆயிரத்து 300 மனுக்களில் உரிய ஆவணம் இல்லாதது
உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 957 தள்ளுபடி செய்யப்பட்டு, 13 ஆயிரத்து
343 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இம்மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு, நாளை கடைசி
நாளாகும்.


