/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு : திருவாரூர் மக்கள் ரெடிஅ.தி.மு.க.,வுக்கு ஓட்டு : திருவாரூர் மக்கள் ரெடி
அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு : திருவாரூர் மக்கள் ரெடி
அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு : திருவாரூர் மக்கள் ரெடி
அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு : திருவாரூர் மக்கள் ரெடி
ADDED : அக் 03, 2011 03:07 AM
திருவாரூர்: ''திருவாரூர் மக்கள் உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க தயாராக இருக்கின்றனர்,'' என்று அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் காமராஜ் பேசினார்.
திருவாரூர் நகர அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட செயலாளரு ம், எம்.எல்.ஏ.,வுமான காமராஜ் தலைமை வகித்து பேசியதாவது: திருவாரூரில் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஜெயித்தால், ஊருக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், அவர் சட்டசபைக்கே வராமல் இருக்கிறார். சட்டசபையில் தொகுதி பற்றி பேச ஆளே இல்லாத நிலை திருவாரூர் தொகுதி மக்களுக்கு உள்ளது.
அந்த நிலை மாற, உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மக்கள் தயாராக உள்ளனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த பொறுப்பாளர்களும், தொண்டர்களும் மக்களிடம் நேரில் சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். திருவாரூர் நகராட்சித்தலைவராக போட்டியிடும் வக்கீல் ரவிச்சந்திரன் மற்றும் 30 வார்டு கவுன்சிலர்களையும் வெற்றிப் பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், டில்லி சிறப்பு பிரதிநிதி அசோகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


