/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் நகராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் நன்மைகள் ஏற்படும்: எம்.பி., தம்பிதுரை பேச்சுகரூர் நகராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் நன்மைகள் ஏற்படும்: எம்.பி., தம்பிதுரை பேச்சு
கரூர் நகராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் நன்மைகள் ஏற்படும்: எம்.பி., தம்பிதுரை பேச்சு
கரூர் நகராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் நன்மைகள் ஏற்படும்: எம்.பி., தம்பிதுரை பேச்சு
கரூர் நகராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் நன்மைகள் ஏற்படும்: எம்.பி., தம்பிதுரை பேச்சு
ADDED : அக் 03, 2011 03:19 AM
கரூர்: ''தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அ.தி.மு.க., உள்ளதால், கரூர் நகராட்சியும் அ.தி.மு.க., வசம் வந்தால் சிறப்பான திட்டங்களை செயல்படுத்த முடியும்,'' என அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை பேசினார்.
கரூர் நகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விசாகனை ஆதரித்து, வெங்கமேடு பகுதியில் எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: கரூர் நகராட்சி சிறியதாக இருந்த போது அ.தி.மு.க., இதுவரை தலைவர் பதவியை பிடித்தது இல்லை.
தற்போது கரூர் நகராட்சியுடன், தாந்தோணி, இனாம் கரூர் மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்துக்கள் இணைந்துள்ளது. பெரிய நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில் முதன் முறையாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வராஜ் வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி, கரூர் எம்.பி., தொகுதியில் நான் அ.தி .மு.க., எம்.பி., கரூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சர் என பதவியில் உள்ளோம். இந்நிலையில், கரூர் நகராட்சியில் அ.தி.மு.க., வெற் றி பெற்றால்தான், முதல்வரசா ல்மக்கள் நலத்திட்டங்களை சிற ப்பாக செயல்படுத்த முடியும்.
கரூர் எம்.பி., தொகுதி நிதியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் கரூர் நகராட்சி பகுதிகளுக்கு ஒதுக்கிய போதும் அதை, தி.மு.க., வை சேர்ந்த நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சியான கரூரை மேலும் வளர்ச்சியடைய அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., காமராஜ், நகர செயலாளர் நெடுஞ்செழியன் உடனிருந்தனர்.


