/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிறுவங்கூரில் குடிநீர் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்சிறுவங்கூரில் குடிநீர் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
சிறுவங்கூரில் குடிநீர் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
சிறுவங்கூரில் குடிநீர் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
சிறுவங்கூரில் குடிநீர் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : அக் 03, 2011 03:40 AM
கள்ளக்குறிச்சி : குடிநீர் பிரச்னையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தில் குடிநீர் மின் மோட்டார் பழுதானதால் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் தெரு மின் விளக்குகள் எரியாமலும், அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை கண்டித்து நேற்று காலை 11 மணிக்கு கிராம பொதுமக்கள் சிறுவங்கூர் பஸ் நிறுத்ததில் சாலை மறியல் செய்தனர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி தலைவர் செல்லமுத்து மற்றும் மின் ஊழியர்கள் நேரில் வந்து சமாதானப்படுத்தியதால் காலை 11.15 மணிக்கு பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


