/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நம்பிக்கை வைத்தால் வெற்றி உறுதி: ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேச்சுநம்பிக்கை வைத்தால் வெற்றி உறுதி: ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேச்சு
நம்பிக்கை வைத்தால் வெற்றி உறுதி: ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேச்சு
நம்பிக்கை வைத்தால் வெற்றி உறுதி: ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேச்சு
நம்பிக்கை வைத்தால் வெற்றி உறுதி: ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேச்சு
ADDED : அக் 03, 2011 03:41 AM
உளுந்தூர்பேட்டை : நம் மீது நம்பிக்கை வைத்தால் இந்தியாவை பெரிய நாடாக உருவாக்க முடியும் என ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேசினார்.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் அன்பும், அமைதியும், ஆனந்தமும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதற்காக நவராத்திரி விழா நடந்து வருகிறது.
நேற்று நடந்த விழாவில் ஸ்ரீசாரதா ஆசிரம தலைமை மாதாஜி யதீஸ்வரி ராமகிருஷ்ணப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். யதீஸ்வரி அனந்தபிரேமப்ரியா அம்பா வரவேற்றார். நிகழ்ச் சியில் ஏ.டி.ஜி.பி.,( உணவு கடத்தல் தடுப்பு ஒழிப்பு பிரிவு) ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
விழாவில் ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் விஞ்ஞானத்தை, கணினி உலக நோக்கில் வளர்ந்து வருகிறோம். ஆனால் விழுப்புரம் மாவட்டம் கல்வியில் கடைசி நிலையிலேயே உள்ளது. இங்கு 100ல் 45 மாணவர்கள் தேர்வில் தோல்வியடைகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 100ல் 95 மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இங்கு படிப்பிற்கும், சமூக சீர்கேட்டிற்கும் தொடர்பு இருக்கிறது. இதனை சரிகட்ட ஒரே தீர்வு கல்வி தான்.
சாரதா ஆசிரமம், ராமகிருஷ்ணா மடத்தில் படிக்கும் மாணவர்கள், மற்ற நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களில் இருந்து வேறுபட்டு இருக்கின்றனர். இங்கு கல்வியோடு நல்ல பண்பு, ஒழுக்கம், மரியாதை, நல்ல குணங்கள் கற்று கொடுக்கப்படுகின்றன. காவல்துறையில் பல அதிகாரிகள் நேர்மையாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வளர்ந்தவிதம்.
இந்தியாவின் சிறப்பை உலகக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தர். அவர் சிகாகோவில் ஆற்றிய உரை உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அவரை அங்கு அனுப்பி வைத்தது சாரதாதேவி அம்மையார் தான். மகாத்மா காந்தி என்ற நல்ல மனிதரால் நாம் சுதந்திரமடைந்தோம். அது போல் தான் ஒரு நல்ல மனிதர் உருவானால் ஒரு நல்ல சமுதாயம் உருவாக்க முடியும். நமக்கு ஜெயிப்போம் என்ற மன உறுதி இருக்க வேண்டும். நம் மீது நம்பிக்கை வைத்தால் இந்தியாவை பெரிய நாடாக உருவாக்க முடியும். இவ்வாறு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் பேசினார்.


