ADDED : அக் 03, 2011 11:01 PM
விருதுநகர் : நீர் நில வள திட்டத்தின் கீழ் வேளாண் வணிகத்துறை சார்பில் தேவியாறு, சீவலப்பேரியாறு, வல்லம்பட்டி உப வடி நிலப்பகுதி விவசாயிகள் பட்டறிவு பயனம் சென்றனர்.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி மண்டல ஆராய்ச்சி நிலையம் உட்பட பல பகுதிகளுக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். வணிக செயலபாடுகள் அறிந்து கொள்ள ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட், நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அழைத்து செல்லப்பட்டனர். சின்னமனூர் வாழை பதனீட்டு மையம், தூத்துக்குடி நிலா குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை வேளாண் வணிக துணை இயக்குனர் சி.கணேசன், அலுவலர்கள் முருகேசன், காயத்ரிதேவி செய்திருந்தனர்.


