/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பம் நகராட்சி தலைவர் காங்., கட்சியினர் உற்சாகம்கம்பம் நகராட்சி தலைவர் காங்., கட்சியினர் உற்சாகம்
கம்பம் நகராட்சி தலைவர் காங்., கட்சியினர் உற்சாகம்
கம்பம் நகராட்சி தலைவர் காங்., கட்சியினர் உற்சாகம்
கம்பம் நகராட்சி தலைவர் காங்., கட்சியினர் உற்சாகம்
ADDED : அக் 03, 2011 11:01 PM
கம்பம் : நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்., கட்சி போட்டியிடுவது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க., தி.மு.க., தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளது. 1996 முதல் 2001 வரை தி.மு.க., 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க., 2006 முதல் 2011 வரை தி.மு.க., என மாறி மாறி கைப்பற்றியுள்ளது. காரணம் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்., கட்சி தி.மு.க., அ.தி.மு.க., வுடன் கூட்டு சேர்ந்திருக்கும். வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., காங்., கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. எனவே காங்., கட்சி, கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஓ.ஆர். குமரேசன் கம்பம் தொகுதியின் மூன்று முறை எம்.எல்.ஏ., வாக இருந்த ராமச்சந்திரனின் சகோதரர். நீண்ட நாட்களுக்கு பின் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் எழுந்துள்ளது.


