ADDED : அக் 04, 2011 01:01 AM
கோவை : சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது.கடந்த ஆண்டு, காரமடையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்களை வழிமறித்து, தொழிலாளர்களின் சம்பளப் பணம் 2.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
காரில் வந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் விசாரித்தார்.தற்போது மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடக்கிறது. விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மட்டும் சாட்சி அளிக்க வேண்டியுள்ளது.
இரண்டு முறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதிருப்தி அடைந்த நீதிபதி சீனிவாசன், சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டருக்கு சாட்சி வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவை,கோவை டி.ஐ.ஜி.,க்கு அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.


