/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு நாள் முன்னதாக வரவேண்டும்'"ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு நாள் முன்னதாக வரவேண்டும்'
"ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு நாள் முன்னதாக வரவேண்டும்'
"ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு நாள் முன்னதாக வரவேண்டும்'
"ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு நாள் முன்னதாக வரவேண்டும்'
ADDED : அக் 04, 2011 01:02 AM
காரமடை : ''ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக வரவேண்டும்.
தேர்தல் முடிந்து பெட்டிகளை எடுத்துச் சென்ற பிறகு தான் வீடுகளுக்கு செல்ல வேண்டும்,'' என, தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் காரமடை லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும், பி.டி.ஒ.,வுமான முகமதுகான் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஆறு பேர் தேர்தல் பணி செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். முதலாமவர் தலைமை தேர்தல் அலுவலர். இரண்டாவது அலுவலர் விரலுக்கு 'மை' வைப்பவர். மூன்றாவது அலுவலர் மாவட்ட கவுன்சிலர் ஓட்டுச் சீட்டும், நான்காவது அலுவலர் ஒன்றிய கவுன்சிலர் ஓட்டுச் சீட்டும், ஐந்தாவது அலுவலர் ஊராட்சி தலைவர் ஓட்டுச் சீட்டும், ஆறாவது அலுவலர் வார்டு உறுப்பினர் ஓட்டுச் சீட்டும் வாக்காளர்களுக்கு மடித்து கொடுக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் தேர்தலுக்கு முதல் நாள் (18ம் தேதி)
மதியம் ஓட்டுச்சாவடிக்கு வந்து விட வேண்டும். தலைமை தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்துவதற்கான பெட்டிகள் உள்பட அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொண்டு படிவத்தில் கையெழுத்திட வேண்டும். அனைத்து அலுவலர்களும் இரவு அங்கேயே தங்க வேண்டும். காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குவதால், அதற்குள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு பெட்டிகளுக்கு, பூத் ஏஜன்டுகள் முன்னிலையில் சீல் வைத்த பிறகு, மண்டல தேர்தல் அலுவலர் பெட்டிகளை எடுத்துச் செல்லும் வரை அனைவரும் அங்கேயே இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். பயிற்சி முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசு நன்றி கூறினார்.


