/உள்ளூர் செய்திகள்/சேலம்/நீச்சல் குளத்தில் ஆழம் குறைக்கும் பணி தீவிரம்நீச்சல் குளத்தில் ஆழம் குறைக்கும் பணி தீவிரம்
நீச்சல் குளத்தில் ஆழம் குறைக்கும் பணி தீவிரம்
நீச்சல் குளத்தில் ஆழம் குறைக்கும் பணி தீவிரம்
நீச்சல் குளத்தில் ஆழம் குறைக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 04, 2011 01:06 AM
சேலம் : சேலம் மகாத்மாகாந்தி ஸ்டேடியத்தில் அமைந்துள்ள, நீச்சல் குளத்தில்
ஆழம் குறைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மகாத்மாகாந்தி
ஸ்டேடியத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்,
கடந்த 4.3.2001ல் நீச்சல் குளம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா,
அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. 53 லட்சம் ரூபாய்
மதிப்பில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தை, 27.8.2003ல் தமிழக முதல்வர்
ஜெயலலிதா திறந்து வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மட்டுமின்றி
பொதுமக்களுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கப்பட்டது. நீச்சல் குளம், 13 அடி
ஆழம் வரை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், இதே நீச்சல் குளத்தில் மாணவர்
ஒருவர் நீச்சல் பயிற்சியின் போது இறந்தார். மேலும், சென்னை நீச்சல்
குளத்திலும் பயிற்சியின் போது, சிலர் இறந்துள்ளனர். நீச்சல் குளத்தில் ஆழம்
அதிகமாக இருப்பதால், சிலர் இறந்து விடுகின்றனர் என, ஆய்வில்
கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்
சார்பில், தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்களின் ஆழத்தை
குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, சேலம் நீச்சல் குளத்தின் ஆழம்
குறைக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர்
ஸ்டான்லி கூறியதாவது: சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில்
அமைந்துள்ள நீச்சல் குளத்தின் ஆழம், 13 அடி. நீச்சலின் போது, இறப்பு போன்ற
விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதால், நீச்சல் குளத்தின் ஆழத்தை குறைக்க
அரசு முடிவு செய்து, 5.8 அடி உயரமே அதிகபட்ச ஆழமாக மாற்றப்படுகிறது.
குறைந்தபட்ச ஆழம் மூன்றடியாக இருக்கும். தற்போது நீச்சல் குளத்தில் மணல்
கொட்டப்பட்டு, ஆழம் குறைக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து 'டைல்ஸ்'
போடப்படும். நீச்சல் குளத்தின் பயிற்சியாளராக ஞானசேகரன் உள்ளார். ஏழு
லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் நீச்சல் குளத்தை சீரமைத்து, ஆழம்
குறைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


