/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவைகூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவை
கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவை
கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவை
கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவை
ADDED : அக் 04, 2011 01:12 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 425 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
அவற்றில், 425 'கண்ட்ரோல் யூனிட்'டுகள், 425 'பேலட்' மெஷின்கள், 20 சதவீத கூடுதல் இருப்பாக 170 மெஷின்கள் தயார் நிலை யில் உள்ளன. ஒரு 'பேலட்' மெஷினில், 16 வேட்பாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பர். திருப்பூர் மாநகராட்சி மேயராக, 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு 'பேலட்' மெஷின் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடிக்கு தலா இரண்டு 'பேலட்' மெஷின்கள் வீதம் 425 ஓட்டுச்சாவடிகளுக்கு 850 மெஷின்கள், கூடுதல் இருப்பாக 170 மெஷின்கள் என 1020 'பேலட்' மெஷின்கள் இருக்க வேண்டும். தற்போது, 858 மெஷின்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, மேலும் 162 மெஷின்கள் தேவை.மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 425 ஓட்டுச்சாவடிகளில், 425 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், கூடுதல் இருப்பாக, 85 மெஷின்கள் தயார் நிலையில் உள்ளன. மொத்தமுள்ள 60 வார்டுகளில், 44வது வார்டில் மட்டும் 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால், 44வது வார்டுக்கு உட்பட்ட 10 ஓட்டுச்சாவடிகளில் இரண்டு 'பேலட்'மெஷின் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 'ரிசர்வ்' மெஷின் இரண்டு உட்பட 12 மெஷின்கள் கூடுதலாக தேவை. திருப்பூர் மாநகராட்சிக்கு மட்டும் 174 மெஷின்கள் கூடுதலாக தேவைப்படுகிறது, என, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயலட்சுமி, மாநில தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


