விமர்சனம் வேண்டாம்: சிவசேனாவிடம் பா.ஜ., வலியுறுத்தல்
விமர்சனம் வேண்டாம்: சிவசேனாவிடம் பா.ஜ., வலியுறுத்தல்
விமர்சனம் வேண்டாம்: சிவசேனாவிடம் பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2011 01:13 AM

தானே : ''சிவசேனா கட்சி, ஆலோசனை சொல்வதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்; விமர்சனம் செய்யக்கூடாது,'' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசு கட்சி ஆகியவை, கூட்டணி வைத்துள்ளன. இதற்கிடையே, பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புறக்கணித்ததன் மூலம், அக்கட்சிக்குள் பனிப்போர் நடப்பதாகவும், ஆயுர் வேதத்தில் திரிபலா சூரணம் போல ஆர்.எஸ்.எஸ்., அத்வானி, கட்காரி ஆகிய மூன்று பேர் சேர்ந்து, நரேந்திர மோடிக்கு எதிராக செயல்படுவதாக, சிவசேனா கட்சி தன் பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
இது குறித்து மகாராஷ்டிர பா.ஜ., தலைவர் சுதீர் முங்கத்திவார் குறிப்பிடுகையில், 'சிவசேனா கட்சி, ஆலோசனைகள் கூறுவதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.,வை பற்றி விமர்சனமெல்லாம் செய்யக்கூடாது' என, தெரிவித்துள்ளார்.


