"2ஜி' வழக்கில் ஐவரின் ஜாமின் மனு : மீதான விசாரணை ஒத்திவைப்பு
"2ஜி' வழக்கில் ஐவரின் ஜாமின் மனு : மீதான விசாரணை ஒத்திவைப்பு
"2ஜி' வழக்கில் ஐவரின் ஜாமின் மனு : மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், சந்தோலியா உள்ளிட்ட ஐந்து பேரின், ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் 17 மற்றும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், நீதிபதி ஒ.பி.சைனி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, இன்னும் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தபின் தான், ஜாமின் மனு பற்றி விசாரிக்க முடியும்.
வரும் 15ம் தேதிக்குள், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளதால், வரும் 17ம் தேதி, ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோரின் ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சந்தோலியா, ஷாகித் பல்வா ஆகியோரின் ஜாமின் மனுக்கள் குறித்து, 18ம் தேதி விசாரிக்கப்படும்' என, உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் 'டிவி' நிர்வாகி சரத் குமார் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


