தேவகோட்டை:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தேவகோட்டை வட்ட கிளை சார்பில் தாலுகா
அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை துணை தலைவர் சகாதேவன் தலைமை
வகித்தார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,புதிய பென்ஷன் திட்டத்தை
கைவிடுதல் உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.செயலர் ஜேக்கப் பேசினார்.
இணை செயலர் சக்திவேல் நன்றிகூறினார்.


