/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கால்வாய் குழாய் அடைப்பு: வீடுகளில் கழிவுநீர் புகுந்ததுகால்வாய் குழாய் அடைப்பு: வீடுகளில் கழிவுநீர் புகுந்தது
கால்வாய் குழாய் அடைப்பு: வீடுகளில் கழிவுநீர் புகுந்தது
கால்வாய் குழாய் அடைப்பு: வீடுகளில் கழிவுநீர் புகுந்தது
கால்வாய் குழாய் அடைப்பு: வீடுகளில் கழிவுநீர் புகுந்தது
ADDED : அக் 04, 2011 10:43 PM
முதுநகர் : கடலூர் முதுநகர் மார்க்கெட்டில் கால்வாய் குழாயில் அடைப்பு
ஏற்பட்டுள்ளதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து தொற்று நோய் பரவும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டில் 20க்கும்
மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளது. இக்கடைகள் மற்றும் அருகில் உள்ள மீன்
மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அங்குள்ள கால்வாய் வழியாக கடலூர் - சிதம்பரம்
சாலையில் மறுபுறத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குச் செல்லும் வகையில்
சாலையில் நடுவில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்தக்குழாய் மூலம் மார்க்கெட்
காய்கறி, இறைச்சி கழிவுகள் எதிரேயுள்ள கழிவுநீர் வடிகால் வாய்காலுக்குச்
செல்லும். கடந்த ஒரு வாரமாக இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால்
கழிவுநீர் வெளியேறாமல் அங்குள்ள 5 இறால் கம்பெனிகள் மற்றும் 10 வீடுகளில்
கழிவுநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும்
இரண்டு முறை பார்வையிட்டு விட்டு சென்று விட்டனர். ஆனால் நடவடிக்கை ஏதும்
எடுக்கவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அங்குள்ள 5 இறால் கம்பெனிகள்
மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்
அடைப்பை சரி செய்து கழிவுநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.


