/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ஹோட்டல் மேனேஜர் மீதுதாக்குதல்: போலீஸ்காரர் கைதுஹோட்டல் மேனேஜர் மீதுதாக்குதல்: போலீஸ்காரர் கைது
ஹோட்டல் மேனேஜர் மீதுதாக்குதல்: போலீஸ்காரர் கைது
ஹோட்டல் மேனேஜர் மீதுதாக்குதல்: போலீஸ்காரர் கைது
ஹோட்டல் மேனேஜர் மீதுதாக்குதல்: போலீஸ்காரர் கைது
ADDED : அக் 05, 2011 12:35 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குடிபோதையில் ஹோட்டல் மேனேஜரை தாக்கிய போலீஸ்காரர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை போக்குவரத்து போலீஸில் பணிபுரிபவர் சசிகுமார். இவர் தனது அண்ணன் மோகனுடன் தமிழ்நாடு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்.
இருவரும் அங்கு மது அருந்தியுள்ளனர். அப்போது இருவரும் சத்தமாக பேசி
கூச்சலிட்டுள்ளனர். அதனால் ஹோட்டல் மேனேஜர் பிரபுதாஸ் அமைதியாக பேசுமாறு
கூறியுள்ளார்.இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த
போலீஸ்காரர் சசிகுமார் மதுபாட்டிலால் மேலாளர் பிரபுதாஸை தலையில் அடித்தார்.
இதில், படுகாயமடைந்த பிரபுதாஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு
சேர்க்கப்பட்டார்.இது குறித்து திருவண்ணாமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து
போக்குவரத்து போலீஸ்காரர் சசிகுமார், அவரது அண்ணன் மோகன் ஆகியோரை கைது
செய்து விசாரித்து வருகின்றனர்.


