/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காலம் கடந்து வந்தசமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைந்து வழங்கப்படுமா?காலம் கடந்து வந்தசமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைந்து வழங்கப்படுமா?
காலம் கடந்து வந்தசமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைந்து வழங்கப்படுமா?
காலம் கடந்து வந்தசமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைந்து வழங்கப்படுமா?
காலம் கடந்து வந்தசமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைந்து வழங்கப்படுமா?
ADDED : அக் 05, 2011 12:43 AM
கடலூர் : காலாண்டு தேர்வு முடிந்த பிறகு கடலூர் மாவட்டத்திற்கு சமச்சீர் பாட புத்தகங்கள் வந்துள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் முதல் மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கல்வி ஆண்டு ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்காக 200 கோடி ரூபாய்க்கு சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் சமச்சீர் கல்வியை ரத்து செய்து, பழைய கல்வி முறையே தொடரும் என அறிவித்தது.இதனை எதிர்த்து கல்வியாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சமச்சீர் பாடபுத்தகம் வழங்கப்படும் என அறிவித்தது. இருப்பினும் ஒவ்வொரு பள்ளியிலும் 40 சதவீத மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படாமல் இருந்தது.இதனால் பள்ளி நிர்வாகங்கள், இருந்த புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கு இரண்டு, மூன்று என பிரித்துக் கொடுத்தனர்.ஆங்கில வழி மாணவர்களுக்கு இன்னும் பல இடங்களில் புத்தகம் முழுமையாக வழங்கவில்லை.இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பிற்கு 27 ஆயிரம் ஆங்கில புத்தகங்களும், 9ம் வகுப்பிற்கு 32 ஆயிரம் கணித புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.காலாண்டு தேர்வு முடிந்து காலம் கடந்து புத்தகங்கள் வந்துள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.


