ADDED : அக் 05, 2011 01:02 AM
தூத்துக்குடி:கோவில்பட்டியில் நின்ற லாரி மீது புல்லட் பைக் மோதிய விபத்தில் இருவர் பலியாயினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழதரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார்,33, மணிகண்டன்,33 ஆகியோர் அங்கிருந்து பட்டாசு வாங்க, சிவகாசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு புல்லட்டில் பைக்கில் புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் கோவில்பட்டி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே வந்தபோது, நிலைதடுமாறிய புல்லட், ரோட்டோரம் மரத்தடி ஏற்றி நின்ற லாரி பின்பகுதியில் மோதியது. இதில், ஸ்ரீகுமார், மணிகண்டன் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து பலியாயினர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. லாரி டிரைவர் நாமக்கல் செல்வராஜை, மேற்கு போலீசார் கைது செய்தனர்.


