Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பண்டிகை பொருட்களுக்கு கிராக்கி

பண்டிகை பொருட்களுக்கு கிராக்கி

பண்டிகை பொருட்களுக்கு கிராக்கி

பண்டிகை பொருட்களுக்கு கிராக்கி

ADDED : அக் 05, 2011 10:37 PM


Google News
ஊட்டி : ஆயுத பூஜையை முன்னிட்டு பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள், கரும்பு உட்பட அலங்காரா பொருட்களின் விற்பனை அதிகரித்தது.

ஒன்பது நாள் நவராத்திரி விழா முடிந்து நேற்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமிக்காக தேவைப்படும் பூ, பழங்கள், கரும்பு மற்றும் பூஜை பொருட்கள் ஊட்டி மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டன. பூஜைக்காக பூ மற்றும் பழங்கள் தேவைப்படுவதால் இவற்றுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. இதனால் இவற்றின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முழம் பூ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us