/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கிராம நூலகங்களால் நல்ல சமுதாயம் உருவாகும்கிராம நூலகங்களால் நல்ல சமுதாயம் உருவாகும்
கிராம நூலகங்களால் நல்ல சமுதாயம் உருவாகும்
கிராம நூலகங்களால் நல்ல சமுதாயம் உருவாகும்
கிராம நூலகங்களால் நல்ல சமுதாயம் உருவாகும்
ADDED : அக் 05, 2011 10:38 PM
கூடலூர் : 'கிராம பகுதிகளில் நூலகங்கள் ஏற்படுத்துவதன் மூலம் நல்ல
சமுதாயத்தை உருவாக்க முடியும்,' என கூடலூர் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
கூடலூர் செம்பாலா நாயக்கன் மூலா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கிராம நூலக
திறப்பு விழா நேற்று நடந்தது. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கந்தையா தலைமை
வகித்தார். சிவராமன், மல்லிகைராஜ், ஜெயராஜ், சந்திரசேகர், குராமசிங்கம்,
ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
நூலகத்தை கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி திறந்து வைத்து பேசினார்.
கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அசோகன்
பேசுகையில்,''புத்தகம் மனிதர்களை வாழ வைக்கிறது.
நல்ல சமுதாயம் உருவாக காரணமாகிறது; இந்த கல்வியாண்டில் எங்கள் கல்லூரியில்
இளநிலையில் 737 மாணவர்களும், முதுநிலையில் 200 மாணவர்களும் சேர்ந்திருப்பதே
இதற்கு உதரணமாகும். கிராமங்களில் நூலகங்களை உருவாக்குவதன் மூலம் நல்ல
சமுதாயத்தை உருவாக்க முடியும்,'' என்றார்.
விழாவில், செம்பாலா ஜி.டி.எம்.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் சரவண வடிவு,
கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கர், மனித உரிமைகள் கழக மாவட்ட
அமைப்பாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். லோகேஸ்வரி நன்றி கூறினார்.


