Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தொடர் மழை ஓய்ந்த பின் நீர்பனி

தொடர் மழை ஓய்ந்த பின் நீர்பனி

தொடர் மழை ஓய்ந்த பின் நீர்பனி

தொடர் மழை ஓய்ந்த பின் நீர்பனி

ADDED : அக் 05, 2011 10:38 PM


Google News
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மழை ஓய்ந்து, நீர் பனி தலை காட்டுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாக மழையின் தாக்கம் வெகுவாக குறைந்தது; ஆயுத பூஜை விடுமுறையை தொடர்ந்து, சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

தற்போது, காலையில் வெயில் வாட்டினாலும், மாலையில் நீர் பனி விழ துவங்கியுள்ளது. இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சம் 19 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. காய்கறி விற்பனைக்கு வரும் விவசாயிகள், சாலையோரங்களில் தீ மூட்டி குளிரைப் போக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர்.

காலநிலையில் இதே நிலை நீடித்தால், நவம்பர் முதல் வாரத்துக்கு பின், பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us