அரசியலுக்கு வந்த கதைய நீயும் கேளு...
அரசியலுக்கு வந்த கதைய நீயும் கேளு...
அரசியலுக்கு வந்த கதைய நீயும் கேளு...
ADDED : அக் 05, 2011 11:02 PM

ராமநாதபுரத்தில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய கட்சி தலைவர் விஜயகாந்த், 'ஏன் அரசியலுக்கு வந்தேன்' என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார்.
அவர் பேசும்போது: தேர்தல் வரும்போதெல்லாம் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், சிங்கார சென்னை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு என கடந்த 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி கூறி மக்களை ஏமாற்றிவந்தனர். 'நீங்கள் மக்கள் பிரச்னையை தீர்த்துவைத்தால் நான் ஏன் அரசியலுக்கு வரப்போகிறேன்.' நீங்கள் செய்யாததால் நான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர, முடிவு செய்து அரசியலுக்கு வந்தேன். எனக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். லஞ்சம் வாங்க மாட்டேன். நீங்கள் அடிக்கடி சட்டையை மாற்றி கொள்வீர்களே, அதே போல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு முறை என்னிடம் ஆட்சியை தாருங்கள். 'நான் மக்களிடம் கெஞ்சுகிறேன்' எனக் கூறுகின்றனர். மக்களிடம் தானே கெஞ்சணும், என்றார்.


