/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் :ஊராட்சி தலைவர் வேட்பாளர்3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் :ஊராட்சி தலைவர் வேட்பாளர்
3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் :ஊராட்சி தலைவர் வேட்பாளர்
3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் :ஊராட்சி தலைவர் வேட்பாளர்
3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் :ஊராட்சி தலைவர் வேட்பாளர்
ADDED : அக் 05, 2011 11:44 PM
சிவகாசி : ''மானூர் குடிநீர் திட்டத்தை முறைப்படுத்தி, மூன்று நாட்களுக்கு
ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ,'' விஸ்வநத்தம் ஊராட்சி
தலைவர் வேட்பாளர் கே.வி.கே.சித்ரா கூறினார்.
சிவகாசி ஒன்றியம் விஸ்வநத்தம்
ஊராட்சி தலைவர் பதவிக்கு, பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடும்
கே.வி.கே.சித்ரா, விஸ்வநத்தம் நடுவூர் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இப்பகுதியில் மானூர் குடிநீர் திட்டம் முறையாக
செயல்படுத்தாததால், தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். என்னை
வெற்றி பெறச் செய்தால், மானூர் குடிநீர் திட்டத்தை முறைப்படுத்தி, மூன்று
நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கிடைக்க, ஏற்பாடு செய்யப்படும். பழுதடைந்த
தெரு விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படும்.50 வீடுகளுக்கு ஒரு குப்பைத்
தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் வாறுகால்
அமைத்து, முறையாக சுத்தம் செய்யப்பட்டு, விஸ்வநத்தம் நடுவூரை தன்னிறைவு
பெற்ற சுகாதாரமான வார்டாக மாற்றுவேன்.ஊழலற்ற வெளிப்படையான உள்ளாட்சி
நிர்வாகம் அமைய பாடுபடுவேன், என்றார். கே.வி.கந்தசாமி உடன் சென்றார்.


