ADDED : அக் 05, 2011 11:55 PM
குஜிலியம்பாறை : ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டி அரசு ஆரம்ப
பள்ளி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இப்பள்ளி, உள் ளாட்சி
தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக மட் டும் செயல்படுகிறது.
செங்குளத்துப்பட்டி, சேகுராவுதத்தனூர், முத்துவீரன்பட்டி, வண்ணாணூரை
சேர்ந்த 450 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்ட
இப்பள்ளி, கதவு, ஜன்னல்கள் உடைந்து, குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
மேஜை, நாற்காலி எதுவுமில்லை. தேர்தலுக்குள் பள்ளியை பராமரிக்க முன்வர
வேண்டும்.


