ADDED : அக் 05, 2011 11:56 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவின் கடையில்,
தீபாவளியை முன்னிட்டு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள்
விற்பனை துவக்க விழா நடந்தது.
கலெக்டர் நாகராஜன் விற்பனையை
துவக்கிவைத்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரமேஷ், ஆவின்
பொதுமேலாளர் நாகராஜன், கலெக்டர் அலுவலக மேலாளர் தெய்வேந்திரன், உதவி
இயக்குனர்கள் கோகிலா, நர்மதாதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர். கலெக்டர்
கூறுகையில், 'ஆவின் விற்பனை நிலையத்தில் ஆவின் தயாரிப்பு பொருட்கள் தவிர
வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பைகளை
பயன்படுத்தக்கூடாது,' என்றார்.


