ADDED : அக் 06, 2011 12:59 AM
புதுச்சேரி : கோரிமேடு ஆயுதப்படை போலீஸ் அலுவலகத்தில், ஆயுத பூஜை விழா
நேற்று கொண்டாடப் பட்டது.
இதையொட்டி, ஆயுதப்படை அலுவலகத்தில் ரகத்திற்கு
ஒரு துப்பாக்கி வீதம் சுத்தம் செய்து, பூசையிட்டு, சிறப்பு பூஜை மற்றும்
தீபாராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் பட்டாலியன்
கமாண்டன்ட் மற்றும் ஆயுதப்படை எஸ்.பி., ஆண்டோ அல்போன்ஸ், இன்ஸ்பெக்டர்கள்
பாபு வரதராஜ், பெரியசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ஏழுமலை, டொமினிக்
மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


