Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பயணிகளுக்கு இடைஞ்சலாக பஸ் நிறுத்தத்தில் குப்பை தொட்டி

பயணிகளுக்கு இடைஞ்சலாக பஸ் நிறுத்தத்தில் குப்பை தொட்டி

பயணிகளுக்கு இடைஞ்சலாக பஸ் நிறுத்தத்தில் குப்பை தொட்டி

பயணிகளுக்கு இடைஞ்சலாக பஸ் நிறுத்தத்தில் குப்பை தொட்டி

ADDED : அக் 06, 2011 12:59 AM


Google News
புதுச்சேரி : பயணிகள் நிழற்குடை எதிரில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

முருகா தியேட்டர் சிக்னல் எதிரிலுள்ள திண்டிவனம் மெயின் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புதுச்சேரியிலிருந்து திண்டிவனம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்கின்றது. இதனால் இங்கு அதிக அளவில் பயணிகள் காத்திருக்கின்றனர். ஆனால் நிழற்குடைக்கு எதிரிலேயே குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிழற்குடையில் பயணிகளுக்காக போடப்பட்டுள்ள இருக்கைகளில் பலர் உட்காருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் நிழற்குடைக்கு எதிரிலுள்ள குப்பைத் தொட்டி பஸ் பயணிகளுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது. பயணிகளுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us