Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பெண் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் புத்துணர்வு அளிக்கும்: திருச்சி கலெக்டர் பேச்சு

பெண் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் புத்துணர்வு அளிக்கும்: திருச்சி கலெக்டர் பேச்சு

பெண் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் புத்துணர்வு அளிக்கும்: திருச்சி கலெக்டர் பேச்சு

பெண் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் புத்துணர்வு அளிக்கும்: திருச்சி கலெக்டர் பேச்சு

ADDED : அக் 06, 2011 03:18 AM


Google News
திருச்சி: திருச்சி முதலாவது பட்டாலியன் ஆயுதப்படை வளாகத்தில், அரசு பெண் அலுவலர்களுக்கான பவானிசாகர் அலுவலர்களால் நடத்தப்படும் அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், திருச்சி மற்றும் கோவையில் பெண் அரசு அலுவலர்களுக்காக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. 35 நாட்கள் நடக்கும் வகுப்பில் 250 பெண் அரசு அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றனர். இப்பயிற்சி வகுப்பை ஓய்வு பெற்ற துணை கலெக்டர்கள் அளவிலான வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கணக்கு அலுவலர்கள் நடத்துகின்றனர்.

திருச்சி ஆயுதப்படை மைதான வளாகத்தில் பெண் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி துவங்கியது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பங்கேற்று, பயிற்சி அலுவலர்களுக்கான கையேட்டை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் பெண் அரசு அலுவலர்களுக்கு புத்துணர்ச்சியையும், நட்புறவையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கின்றது. ஒருமாத காலம் தங்கி பயிற்சி பெறும்போது தன்னம்பிக்கையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம். அலுவலக நடைமுறையில் சில விஷயங்களை மறந்திருந்தாலும் கூட இப்பயிற்சி புதுப்பித்து கொள்ள உதவுகிறது. மிகவும் அருமையான சந்தர்ப்பமாக உள்ள இப்பயிற்சி வகுப்பை பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பதவி உயர்வு பெற்று வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., மாணிக்கம், ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ.,வும், திருச்சி பயிற்சி வகுப்பின் முதல்வருமான விஸ்வநாதன், காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் கமலம், பவானிசாகர் பயற்சி மைய துணை கலெக்டர் லாரன்ஸ், கமாண்டர் ஜெயபாலன், பயிற்சி வகுப்பின் விரிவுரையாளர்களான வருவாய்துறைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., சந்திசேகரன், துணை கலெக்டர்கள் பாலசுப்ரமணியன், சாம்பசிவம், பஞ்சநாதன், கிருஷ்ணகுமார், கணக்குத்துறை அலுவலர்களான அகஸ்டியன், ஜெயபால், சுப்ரமணியம், ராஜேந்திரன், ஜெயமணி, வசந்த்மல்லிகா, வளர்ச்சித்துறை அலுவலர்களான ஜோசப் சவுந்தரராஜன், சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us