/உள்ளூர் செய்திகள்/திருச்சி/விழுந்துவிடும் நிலையில் மின்கம்பங்கள் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவைவிழுந்துவிடும் நிலையில் மின்கம்பங்கள் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
விழுந்துவிடும் நிலையில் மின்கம்பங்கள் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
விழுந்துவிடும் நிலையில் மின்கம்பங்கள் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
விழுந்துவிடும் நிலையில் மின்கம்பங்கள் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
ADDED : அக் 06, 2011 03:22 AM
முசிறி: முசிறி நகரில் பழுதான நிலையில் மின்வாரியத்துறையினர் மூலம்
பராமரிக்கப்படாத நிலையில், பெரும்பாலான மின்கம்பங்கள் காணப்படுகிறது. சில
இடங்களில் மின்கம்பத்தின் சிமெண்ட்கள் உதிர்ந்து கீழே விழுந்த நிலையில்,
எலும்புக் கூடு போல் மின்சார கம்பிகளை தாங்கிச் செல்லும் கம்பங்கள்
காணப்படுகிறது. தற்போது பரவலாக பெய்து வரும் மழையினால் கம்பங்கள்
நடப்பட்டுள்ள பூமி பகுதி ஈரமுடன், குழைவாக இருப்பதால், எந்த நேரமும்
மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுமோ என்ற அச்சமுடன் பொதுமக்கள்
மின்கம்பங்களை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் முசிறி குளித்தலையை இணைக்கும்
பெரியார் பாலம் அருகில் மணல் லாரி மோதியதால், வளைந்த நிலையில் காணப்படும்
இரும்பு மின்கம்பம், 'இதே விழுந்து விடுவேன்' என்று அச்சுறுத்தும் வகையில்
அந்த பகுதியை கடந்து செல்லும் பஸ், லாரி மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளை
மிரட்டிக் கொண்டு இருக்கிறது.
கடந்த ஒரு வார காலமாக மின்கம்பத்தின் நிலை குறித்து, நகரின் காணப்படும்
மின்கம்பங்களின் நிலை குறித்தும் பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு
தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மின்வாரிய அதிகாரிகள் உயிர் தேசத்தை
பற்றி கவலைப்படாமல் மின்கம்பத்தினை மாற்ற எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளவில்லை. மின்வாரிய துறை அதிகாரிகள் கவனமுடன் உடனடி நடவடிக்கை
மேற்கொண்டால், உயிர்தேசத்தை தடுத்து நிறுத்த முடியும். கவனிப்பார்களா
மின்வாரிய அதிகாரிகள்?.


