/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: 52 மி. மீ., பதிவுகரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: 52 மி. மீ., பதிவு
கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: 52 மி. மீ., பதிவு
கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: 52 மி. மீ., பதிவு
கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: 52 மி. மீ., பதிவு
ADDED : அக் 06, 2011 03:24 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி ஒரே நாளில் 52 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
கடந்த சில நாட்களாக கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தியது. இதனால் இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி மதியம் இரண்டு மணியிலிருந்து, வானம் மேக மூட்டமாக இருந்தது. தொடர்ந்து, அன்று மாலை ஆறு மணி முதல், விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது.
மாவட்டத்தில் கடவூரில் 4.2 மி.மீ., பாலவிடுதியில் 1.2 மி.மீ., மைலம்பட்டியில் 13 மி.மீ., கரூரில் 26.2 மி.மீ., பஞ்சப்பட்டியில் 1.8 மி.மீ., தோகைமலையில் 5.6 மி.மீ., என ஒரே நாளில் 52 மி.மீட்டர் மழை பெய்தது. மழையின் மொத்த சராசரி 4.3 மீட்டராக பதிவானது.


