ADDED : அக் 06, 2011 06:35 PM
புதுடில்லி: சென்னையில் தயாநிதி விட்டிற்கு சட்ட விரோதமாக கொடுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டெலிபோன் இணைப்புகள் குறித்தும் அவருடைய சகோதரர் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டது குறித்தும் விவரங்களை அளிக்குமாறு டெலிகாம் துறையிடம் சி.பி.ஐ., கேட்டுள்ளது.
கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் துவக்கிய சி.பி.ஐ., தயாநிதி வீட்டிற்கு ஐஎஸ்டிஎன் இணைப்புகளை வழங்கியது தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளது.
தயாநிதி வீட்டிற்குத் தரப்பட்ட இந்த இணைப்புகள் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது தொடர்பான தொழில்நுட்ப விவரங்களையும் சிபிஐ கேட்டுள்ளது.


