Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தயாராகும் ஓட்டு எண்ணிக்கை மையம்

தயாராகும் ஓட்டு எண்ணிக்கை மையம்

தயாராகும் ஓட்டு எண்ணிக்கை மையம்

தயாராகும் ஓட்டு எண்ணிக்கை மையம்

ADDED : அக் 06, 2011 09:25 PM


Google News
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் பதிவாகும் ஓட்டுக்கள் எண்ணும் மையம், எல்.ஆர்.ஜி., கல்லூரியில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் மற்றும் மேயர் பதவிக்கான தேர்தல் வரும் 17ல் நடக்கிறது. பதிவாகும் ஓட்டுக்கள் 21ல், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 364 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 425 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள தோடு, ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 200 மீட்டருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்கும் வகையில் ரோடுகளில் 'மார்க்கிங்' பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி., கல்லூரியில், ஓட்டு எண்ணிக்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, ஓட்டுப் பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக, பூத் வாரியாக இருப்பு வைக்கும் வகையில் நான்கு அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.மேயர் பதவி ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கவுன்சிலர் பதவி ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் தனித்தனியாக இருப்பு வைக்கும் வகையில் தலா இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களை வரிசையாக அடுக்கும் வகையில், ஒன்று முதல் 364 மையங்களுக்கான எண்கள் பெயிண்டால் எழுதப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்று மாலையே 'சீல்' வைக்கப்படும் ஓட்டு இயந்திரங்கள் எல்.ஆர்.ஜி., கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, ஓட்டுச்சாவடி வாரியாக அடுக்கப்பட்டு, அறைக்கும் 'சீல்' வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 21ம் தேதி வரை, கல்லூரி வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.தற்போது ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறை பணிகள் தற்போது நிறைவடைந் துள்ளன. அடுத்தகட்டமாக ஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கான அறைகள் தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. வார்டு வாரியாக ஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கான அறை, வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்கள் ஓட்டு எண்ணிக்கையை பார்வையிடும் வகையில் சுற்றிலும் கம்பி வலை அமைத்து, அறை தயார்படுத்தும் பணி துவங்க உள்ளது. எல்.ஆர்.ஜி., கல்லூரி வளாகத்தில் தற்போது துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us