/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீட்டில் திடீர் தீ: பொருட்கள் நாசம்வீட்டில் திடீர் தீ: பொருட்கள் நாசம்
வீட்டில் திடீர் தீ: பொருட்கள் நாசம்
வீட்டில் திடீர் தீ: பொருட்கள் நாசம்
வீட்டில் திடீர் தீ: பொருட்கள் நாசம்
ADDED : அக் 06, 2011 09:37 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால்,
அங்கிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது.
பொள்ளாச்சி அடுத்த
குரும்பபாளையம் கலைஞர் வீதியை சேர்ந்தவர் ஜோதிராஜ் (49); வியாபாரி. இவரது
மனைவி சைலேஷ்வரி(45), அருண்குமார் (19) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு
வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, அருண்குமார் திடீரென பார்த்த
போது வீடு தீப்பிடித்து எரிவது தெரிந்தது. உட னடியாக, சைலேஷ்வரி,
அருண்குமாரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால், இருவருக்கும் சிறு, சிறு
தீக்காயம் மட்டும் ஏற்பட்டது. தீயை அணைப்பதற்குள், வீடு முழுவதும் எரிந்து
தீக்கு இரையானது. இதில், வீட்டில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும்
எரிந்து சாம்பலானது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து
குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


