ADDED : அக் 06, 2011 10:23 PM

மதுரை மீனாட்சி கோயில் அருகே, காங்கிரஸ் மேயர் வேட்பாளர் சிலுவையை ஆதரித்து மாஜி.எம்.பி.,ராம்பாபு, வி.ஐ.பி.க்கள் பிரசாரம் செய்தனர்.
அப்போது திடீரென மழை பெய்தது. உடனே, வேட்பாளரும் உடன் வந்த வி.ஐ.பி.க்களும் தெரித்து ஓடி, பின்னால் வந்த அவர்களது கார்களில் உட்கார்ந்து கொண்டனர். பாவம், ஏழை தொண்டர்கள் கைகளில் இருந்த கட்சிக் கொடிகளை தலையில் பிடித்த படி நின்றிருந்தனர்.


