/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வைகோ பேச்சுகட்சியின் அங்கீகாரம் அறிய தேர்தலில் போட்டிவைகோ பேச்சுகட்சியின் அங்கீகாரம் அறிய தேர்தலில் போட்டி
வைகோ பேச்சுகட்சியின் அங்கீகாரம் அறிய தேர்தலில் போட்டி
வைகோ பேச்சுகட்சியின் அங்கீகாரம் அறிய தேர்தலில் போட்டி
வைகோ பேச்சுகட்சியின் அங்கீகாரம் அறிய தேர்தலில் போட்டி
ADDED : அக் 07, 2011 01:19 AM
திருச்செங்கோடு: ''எங்களது பணிகளுக்கு மக்கள் வழங்கும் அங்கீகாரம் என்ன
என்பதை அறிந்து கொள்ள, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்,''
என, திருச்செங்கோட்டில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ
பேசினார்.திருச்செங்கோட்டில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நகர,
ஒன்றிய ம.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ
பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:உள்ளாட்சி தேர்தலில்,
ம.தி.மு.க., வெற்றி பெற்றால் அரசியல் சாராத அமைப்பினர், ஓய்வு பெற்ற
முன்னாள் அரசு அலுவலர்கள், லயன்ஸ், ரோட்டரி சங்கத்தினர் மற்றும் நகர,
கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு
அமைக்கப்படும்.தமிழகத்தின் பிரதான கட்சிகள் எல்லாம் தேர்தலை மனதில் வைத்து
செயல் பட்டு வந்த நிலையில், முல்லை பெரியாறு அணையை, கேரள அரசு உடைக்க
எடுத்த முயற்சிகளை கண்டித்து, மதுரையில் மக்களை திரட்டி ம.தி.மு.க.,
போராட்டம் நடத்தியது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து ம.தி.மு.க., போராடி
வருகிறது.
இது தவிர, மக்களுக்கான பணிகளிலும், போராட்டங்களிலும் தொடர்ந்து
போராடி வருகிறது. எங்களது பணிகளுக்கு மக்கள் வழங்கும் அங்கீகாரம் என்ன
என்பதை அறிந்து கொள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்து
போட்டியிடுகிறோம்.உள்ளாட்சி தேர்தலில் ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்தால்,
நேர்மையான, நாணயமான, தூய்மையான நிர்வாகத்தை கொடுப்போம். இலங்கை தமிழர்கள்
பிரச்னை, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு
தண்டனை குறித்து, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை
பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.கட்சியின் மாவட்ட செயலாளர் குருசாமி,
பஞ்சாயத்து தலைவர் கணேசன் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.


