/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தி.மு.க., வினர் "அப்செட்' அ.தி.மு.க., உற்சாகம்தி.மு.க., வினர் "அப்செட்' அ.தி.மு.க., உற்சாகம்
தி.மு.க., வினர் "அப்செட்' அ.தி.மு.க., உற்சாகம்
தி.மு.க., வினர் "அப்செட்' அ.தி.மு.க., உற்சாகம்
தி.மு.க., வினர் "அப்செட்' அ.தி.மு.க., உற்சாகம்
ADDED : அக் 07, 2011 01:21 AM
காட்டுமன்னார்கோவில் : முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடந்த அதிரடி
சோதனையால் தி.மு.க.,வினர் அப்செட் ஆகியுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்
பேரூராட்சியில் தி.மு.க., சார்பில் சிட்டிங் தலைவர் கணேசமூர்த்தியும்,
அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர். தாசனும், காங்., கட்சியில் கனகசபையும்
போட்டியிடுகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் முட்டம் வீடு மற்றும் அவரது கடையில் லஞ்ச
ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் தி.மு.க., தொண்டர்கள் மற்றும்
நிர்வாகிகள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இதனால் இவர்களின் தேர்தல்
பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., வினரின் தொய்வு நிலையை
கருத்தில் கொண்டு காட்டுமன்னார்கோவில் அ.தி.மு.க., வினர் உற்சாகமாக தேர்தல்
களத்தில் இறங்கியுள்ளனர். பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும்
எம்.ஜி.ஆர். தாசன் தொகுதி எம்.எல்.ஏ., முருகுமாறன், வார்டு செயலர்
பாலமுருகன்,தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினருடன் பேரூராட்சி பகுதிகளில்
உள்ள அனைத்து வார்டுகளிலும் ஓட்டு சேகரிக்கும் பணியை துவக்கி உள்ளார்.
தி.மு.க., வினர் உற்சாகம் இழந்த நிலையில், வெற்றி நமதே என்கிற போக்கில்
உற்சாகத்துடன் களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றும் அ.தி.மு.க., மற்றும்
காங்., கட்சியினரால் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அரசியல் களம் சூடு
பிடிக்க துவங்கியுள்ளது.


