ADDED : அக் 07, 2011 01:24 AM
ப.வேலூர்: கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தந்தையை நினைத்து மனம்
வருந்திய மகள், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ப.வேலூர்
அருகே தேவராயபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். அவர், கொலை வழக்கு சம்மந்தமாக,
கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை சிறையில் இருப்பதை நினைத்து, அவரது
மகள் திவ்யா (19), மனம் வருந்திய நிலையில் இருந்துள்ளார்.இந்நிலையில்,
நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த திவ்யா, வீட்டின் முற்றத்தில் தூக்கு
போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக ப.வேலூர் போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட திவ்யா, ப.வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.


